பள்ளிகளில் உடற்பயிற்சி வகுப்பை மற்ற ஆசிரியர்கள் கடன் கேட்க வேண்டாம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் திறந்து விட்டன. நீங்கள் விளையாடுவதை கைவிடக்கூடாது. அதற்குத்தான் விளையாட்டு வகுப்பு இருக்கிறது. பள்ளிகளில் முக்கியமாக கணிதம் அல்லது அறிவியல் ஆசிரியர்கள் உடற்கல்வி வகுப்பை கடன் கேட்காதீர்கள் என்று நான் உங்களிடம் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

நம்முடைய மாணவர்கள் தொடர்ந்து விளையாடட்டும். அவர்களை விளையாட அனுமதியுங்கள். விளையாட்டு துறையை பொருத்தவரை தமிழ்நாட்டில் இப்போது ஒரு எழுச்சி இருக்கிறது. கிரிக்கெட் போட்டியை தாண்டி பல்வேறு போட்டியிலும் நம்முடைய மாணவர்களுக்கு மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டது என்று குறிப்