
நாடு முழுவதும் தற்போது அனைவருடைய கைகளிலுமே ஸ்மார்ட் போன் இருப்பதால் அதன் மூலமாக பணம் அனுப்புவதும், பெறுவதும் எளிதாகிவிட்டது. டிக்கெட் புக் செய்வது, பில் கட்டணம் செலுத்துவது, ரீசார்ஜ் செய்வது என பல விஷயங்களுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது யுபிஐ பரிவர்த்தனைகளில் வணிகர்களுக்கு வழங்கப்படும் மானியத்தை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து பரிவர்த்தனை கட்டணத்தை வசூலிக்க தயாராகி வருகிறது.
google pay, டெபிட் கார்டுக்கு 0.5% மற்றும் கிரெடிட் கார்டுக்கு 1 சதவீதம் வரை வசூலிக்க தொடங்கியுள்ளது. போன் பே மற்றும் paytm ஆகியவை மொபைல் ரீசார்ஜ் போன்ற சேவைகளில் கட்டணம் வசூலிக்க தொடங்கியுள்ளனர். இதுவரை இலவசமாக யூபிஐ மூலமாக பணம் செலுத்தும் வசதியில் இனி படிப்படியாக கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது சிறிய பரிவர்த்தனைகளில் நிவாரணம் இருக்கலாம் என்றாலும் வரும் காலங்களில் அனைத்து வகையான யூபிஐ பண பரிவர்த்தனைகளிலும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.