
பிரபல தென் ஆப்பிரிக்கா ரேப் சிங்கர் கீரன் ஃபோர்ப்ஸ்(35) சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். AKA என அழைக்கப்படும் அவர் புளோரிடாவில் உள்ள பிரபல உணவகத்திற்கு வெளியில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மர்ம நபர்கள் அவரை சுட்டுக் கொண்டனர். இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு நேர்ந்துள்ளது.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். AKA-வுக்கு இந்தியாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.