விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு உள்ளதாக பழ.நெடுமாறன் தெரிவித்ததை தொடர்ந்து, அந்த விவகாரம் மீண்டுமாக பேசுபொருளாகி இருக்கிறது. இதில் அரசியல் கட்சித் தலைவர்கள் பல விதமான கருத்துகளை தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்கிற அறிவிப்பில் கால பொருத்தமும் இல்லை, அரசியல் பொருத்தமும் இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக அரசு ஈழ தமிழர் பிரச்சனையில் சிங்கள அரசை அச்சுறுத்தும் நோக்கோடு இதில் தலையிடுவதாக தெரிகிறது. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று அறிவிப்பின் பின்னணியில் இந்திய உளவுத்துறை இருப்பதாக எண்ணப்படுகிறது என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.