
சீரியல் நடிகையான பவித்ரா ஜனனிக்கு முன்னணி நடிகர் விஜய்சேதுபதி பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்துள்ள வீடியோ இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
விஜய் டிவி நடிகையான பவித்ரா ஜனனி இப்போது “தென்றல் வந்து என்னை தொடும்” சீரியலில் நடித்து வருகிறார். வரும் ஜனவரி 30 ஆம் தேதி பவித்ராவுக்கு பிறந்தநாள் வருகிறது. இதை முன்னிட்டு அவரது நண்பர்கள் சியாமந்தா கிரண் மற்றும் ரியோராஜ் ஒரு சூப்பரான சர்ப்ரைஸை கொடுத்து உள்ளனர்.
அதாவது, பவித்ராவுக்கு மிகவும் பிடித்த நடிகரான விஜய் சேதுபதியின் வீட்டுக்கு கண்ணை கட்டி அழைத்துச்சென்று அவரை சந்திக்க வைத்திருக்கின்றனர். அப்போது விஜய்சேதுபதியை பார்த்த பவித்ரா ஒரு நிமிடம் மகிழ்ச்சியில் திகைத்து போய் நிற்கிறார். அதன்பின் விஜய்சேதுபதி பவித்ராவை அழைத்து கைகுலுக்கி பிறந்தநாள் வாழ்த்துகள் கூறினார். இந்த வீடியோவை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள பவித்ரா, இது மறக்க முடியாத பிறந்தநாள் பரிசு என நெகிழ்ச்சி தெர்வித்துள்ளார்.
View this post on Instagram