மும்பை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் வசித்து வரும் 22 வயதான இளம் பெண் ஒருவர், தனது தோழியின் பிறந்தநாள் விழாவிற்கு பத்லாபூரின் ஷிர்கான் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்றுள்ளார். பிறந்தநாள் விழாவில் அனைவரும் மது அருந்திக்கொண்டு கும்மாளம் போட்டதால் இதை விரும்பாத அந்த இளம் பெண் தனது வீட்டிற்கு செல்ல முயன்றுள்ளார்.

அப்போது அந்தப் பெண்ணின் தோழி போதைப்பொருள் கலந்த குளிர்பானத்தை அவருக்கு கொடுத்துள்ளார். சாதாரண குளிர்பானம் என நம்பி அந்த இளம் பெண்ணும் அதனை வாங்கி குடித்துள்ளார். குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்தில் இளம்பண்ணுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அறிந்த இளம் பெண் அங்கிருந்து தப்பித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணின் தோழி மற்றும் இரண்டு வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.