தென்கிழக்கு ஜப்பானில் மியாசாகி என்ற விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம் இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் விமானப்படை தாக்குதலுக்காக கட்டப்பட்டது. இதில் தற்கொலை படை தாக்குதல்கள் சில நடை பெற்றுள்ளன.இந்த விமான நிலையத்தில் புதன்கிழமை அன்று மியாசாகி விமான நிலையத்தில் திடீரென எதிர்பாராதவிதமாக ஓடுபாதையில் குண்டு வெடித்தது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா ஜப்பான் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் வெடிக்காத குண்டுகளை இந்த விமான நிலையத்தின் பல இடங்களில் புதைத்து வைத்துள்ளனர். இந்நிலையில் வியாசாகி விமான நிலையத்தில் எதிர்பாராத விதமாக மண்ணில் புதைக்கப்பட்ட குண்டு வெடித்தது.

இந்த குண்டின் எடை 230 கிலோ ஆகும். இந்த குண்டுவெடிப்பில் 7 மீட்டர் சுற்றளவில் ஒரு மீட்டர் ஆழத்துக்கு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த குண்டை சோதனை செய்த பாதுகாப்புத்துறை இது இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்திய குண்டு என உறுதியளித்துள்ளது. இதனால் தரையிறங்க வேண்டிய மற்றும் புறப்பட தயாராக இருந்த 80 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் இந்த பள்ளத்தை இரவே முழுவதுமாக சரி செய்து மறுநாள் விமானங்கள் வழக்கம்போல் செயல்பட்டது. இந்த குண்டுவெடிப்பால் எந்தவித பொருட்சேதமும், உயிர் சேதமும் ஏற்படவில்லை. இவ்வாறு ஜப்பான் போக்குவரத்து துறை அதிகாரி அறிவித்துள்ளார்.