இஸ்ரேலியர் எல்கானா போஹ்போட், கடந்த 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பால் கடத்தப்பட்டு காசா பகுதியில் 540 நாட்களுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார். சமீபத்தில் ஹமாஸ் வெளியிட்ட இரண்டாவது வீடியோவில், அவர் அழுதுக்கொண்டே, “தயவுசெய்து என்னை மீட்டுச் செல்லுங்கள், என் மனைவியையும் மகனையும் மிஸ் பண்ணுகிறேன். நான் தான் இந்த வீடியோவை எடுக்கக் கூறினேன்.

ஹமாஸ் என்னை கட்டாயப்படுத்தவில்லை. இது உளவியல் போர் அல்ல. உண்மையான உளவியல் தாக்கம் என் மனதில்தான் நடக்கிறது,” என உருக்கமாகக் கூறினார். மேலும், “நீங்கள் பெண்களை, முதியவர்களை, இளைஞர்களை விடுவித்துவிட்டீர்கள். எங்களை ஏன் விட்டுவைக்கவில்லை?” என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார்.

 

இந்த வீடியோவை அவரது குடும்பத்தினர் ஆதரித்து வெளியிட்டுள்ளனர். அதில், “எல்கானா இன்னும் எவ்வளவு நாள் இந்த நரகத்தில் உயிருடன் இருப்பார் என்று தெரியவில்லை. எங்களது மகனை மீட்பதற்கான போராட்டத்தை நிறுத்த மாட்டோம். அவரை மறக்காதீர்கள். அவரைப் போன்ற இன்னும் பலர் சிறையில் இருக்கின்றனர்.

கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 251 பேர் கடத்தப்பட்டதில், 59 பேர் இன்னும் காசாவில் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24 பேர் இரண்டாவது கட்ட உடன்படிக்கையில் விடுவிக்கப்படவிருந்தனர், ஆனால் போர் மீண்டும் துவங்கியதால் அந்த ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.