
செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி, எங்களை எல்லாம் குண்டர்கள், சமூக விரோதர்கள் என்று சொல்வதன் மூலமாக என்ன சாதிக்கப் போகிறீர்கள் ? இப்படியான மோசமான அரசியல் முடிவுக்கு வரவேண்டும். இதற்காக தான் அதிமுக அரசை வீட்டுக்கு அனுப்பினோம். அதே அரசியல் திரும்ப திமுக ஆட்சியில் தொடர்கிறது என்றால், மரியாதைக்குரிய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இதை கண்டு கொள்ளாமல், தவிர்க்கிறார்கள் என்றால்…
அப்ப நாங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்களை எதிர்த்து போராடம் நடத்த வேண்டிய இடத்திற்கு நீங்கள் தள்ளுகின்றீர்கள் என்றால், அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் பல்வேறு ஜனநாயக போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். எதுவுமே வெளியே வரவில்லை. இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு கூட மின்சார விலை ஏற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றோம்.
தமிழ்நாடு முழுவதும் ஜனநாயக போராட்டத்திற்கும் நாங்கள் நிற்கிறோம். எந்த ஆட்சி வந்தாலும், நாங்கள் போராட்டத்தில் மக்களுக்காக நிற்போம். அருள் ஆறுமுகம் உள்ளிட்ட அணைத்து விவசாயிகள், உழவர்களும் விடுதலை செய்யப்படனும். அவர்களுடைய கைதை… குண்டர் சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினால் அரசுக்கு என்ன பிரச்சனை ?
போராட்டம் நடத்தியவர்களை ஏன் கைது செய்கிறீர்கள் ? அப்படி என்ன பயப்படுகிறீர்கள் ? வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினால், உங்களுக்கு என்ன பிரச்சனை ? எங்கள் கருத்தை நாங்கள் சொல்லுகிறோம்… மெரினாவில் கிரிக்கெட்டை மேட்சிக்கு ஸ்கிறீன் போட்டு நடத்துகிறீர்கள்…. போராட்டம் நடத்துவதற்கு உரிமை இல்லையா ? என கேள்வி எழுப்பினார்.