பிரதமர் நரேந்திர மோடி நாட்டி உள்ள விவசாயிகளுக்கு மிகப் பெரிய நல்ல செய்தியை வழங்க இருக்கிறார். அதன்படி, ஹோலி பண்டிகைக்கு முன் சுமார் 12 கோடி விவசாயிகளுக்கு தலா ரூபாய்.2000 வழங்க உள்ளார் பிரதமர். பிஎம் கிசான் சம்மன் நிதியின் 13வது தவணையானது விவசாயிகள் கணக்கில் வரவுவைக்கப்படும்.

இப்பணம் அவர்களின் நிதிதேவைக்கு சிறந்த பலன் அளிக்கும். ஆகவே இவ்விவசாயிகளுக்கு ரூபாய்.16 ஆயிரம் கோடியை ஆன்லைன் மூலம் வழங்கயிருக்கிறார் பிரதமர் மோடி. இதுவரையிலும் விவசாயிகள் 12-வது தவணைகள் வாயிலாக ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமான பலன்களை பெற்றிருகின்றனர்.

பிஎம் கிசான் திட்டத்தில் இருந்து விலக்கப்பட்டவர்களில் நிறுவன நிலம் வைத்திருப்போர், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் விவசாயக் குடும்பங்கள், பணியாற்றும் (அ) ஓய்வுபெற்ற அதிகாரிகள், மாநில (அ) மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும், அரசு தன்னாட்சி அமைப்புகளும் அடங்கும். மேலும் மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், ரூ.10,000 மேல் மாத ஓய்வூதியம் உள்ள ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள் மற்றும் கடந்த மதிப்பீட்டு ஆண்டில் வருமானவரி செலுத்தியவர்களும் இத்திட்டத்தின் பலன்களை பெற தகுதியற்றவர்கள் என சொல்லப்படுகிறது.