
PM ஆவாஸ் யோஜனா என்ற பெயரில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை மத்திய அரசு 2015 ஆம் வருடம் முதல் செயல்படுத்தி வருகிறது. இதில் தகுதி வாய்ந்த அனைத்து நகர்புற பயனாளிகளுக்கும் அடிப்படை உரிமை வசதிகளோடு கூடிய அனைத்து காலங்களிலும் வீடுகளை வழங்குவதற்கான மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் மூலம் செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உதவுகிறது.
இந்நிலையில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் கடந்த 2016 முதல் 2020 வரை மோசடியில் ஈடுபட்டு வந்த தமிழ்நாட்டின் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகள் 50 பேர் மீது ஊழல் தடுப்பு பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இந்த திட்டத்தின் மூலமாக மொத்தம் 2 கோடி ஊழல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர் .வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் பணி முடிந்ததாக போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் அம்பலமாகி உள்ளது.