PMAYG திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இரண்டு கோடி வீடுகளை கட்டி தர மத்திய அரசு ஒப்புதல் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை நடைபெறவுள்ள முதலமைச்சரவை கூட்டத்தில் இலாகா தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. மேலும் இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட அடுத்த ஐந்து ஆண்டுக்குள் 2 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என்ற திட்டத்திற்கான ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.