மத்திய அரசின் பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டமும், மாநில அரசின் கிராம சாலை மேம்பாட்டு திட்டமும் ஒன்றுதான் என்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அவதூறு கருத்துக்கு தமிழக அரசின் உண்மை நிலை சரிபார்ப்பு குழு தற்போது விளக்கம் அளித்துள்ளது. கிராமங்களை தரமான சாலைகள் மூலம் இணைப்பது மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வது இந்த திட்டமாகும்.

சாலைகள் மற்றும் தொகுதிகளில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக பொருளாதார காரணிகளைக் கொண்டு இந்த திட்டம் முழுவதுமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மாநில நிதியால் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.