பாமக தலைவராக அன்புமணி ராமதாஸும், கௌரவத் தலைவராக ஜி.கே மணியும், கட்சி நிறுவனராக டாக்டர் ராமதாஸும் இருந்து வருகின்றனர். கட்சியில் உறவினர்களுக்கு பதவி வழங்கியது தொடர்பாக டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதன் காரணமாக கட்சி கூட்ட மேடையில், கட்சியில் இருந்தால் இரு, இல்லையென்றால் வெளியேறு என டாக்டர் ராமதாஸ் கோபமாக தெரிவித்தார். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் விளக்குவதாக தெரிவித்தார்.

இதனால் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கட்சி தலைவர்கள் சமரசம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாமக கௌரவத் தலைவர் ஜிகே மணி கூறியதாவது ,மாமல்லபுரத்தில் வருகிற மே 11ஆம் தேதி பாமக மாநாடு நடைபெற உள்ளது. இதில் அவர்கள் இருவருமே கலந்து கொள்வார்கள்.

இதுகுறித்து அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். இவர்கள் இருவருக்கும் இடையே சிறு சலசலப்பு இருந்தது. ஆனால் இப்போது இல்லை. அனைத்து கட்சியிலும் சலசலப்பு என்பது சாதாரணம் என்று தெரிவித்தார்.