சமூக ஊடகத்தில் தற்போது மேக்போன் மூலம் நபர் ஒருவர் போலீஸ் கார் சைரன் போல ஒலி எழுப்பி பைக் ஸ்டண்ட் செய்பவர்களை ஓட விடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு நபர் போலீஸ்கார் அருகில் நின்று தனது வாயை பயன்படுத்தி சைரன்  ஒலி எழுப்புகிறார்.

இதேபோன்று அவர் பல சாலைகளில் ஓரங்களில் மறைந்திருந்து மேக்போன் மூலம் சைரன் ஒலி எழுப்பி பைக் ஸ்டண்ட் செய்யும் நபர்களை ஓட விடுவது போன்ற காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று மற்றொரு இடத்தில் மைக்போன் மூலம் போலீஸ் சைரன் ஒலியை வாய்மூலம் எழுப்புகிறார்.

அப்போது அப்பகுதி வழியாக வந்த பைக்கர் ஒருவர் போலீஸ் சைரன் கேட்டதும் அருகில் உள்ள மக்காச்சோளம் நிலத்திற்குள் பைக் உடன் பாய்ந்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போரிடம் கலகலப்பை  ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த வீடியோ குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.