தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காவல்துறை மீதான மானிய கோரிக்கையை நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். அதில் காவலர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்க்கும் பாலமுருகன் என்பவர் மானிய கோரிக்கையை விமர்சித்து சமூக வலைதளத்தில் மீம் வீடியோவை வெளியிட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமை காவலர் பாலமுருகனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.