கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பாகலூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தின் விடுதியில் தங்கி இருந்து திருப்பூரை சேர்ந்த 17 வயது சிறுமி வேலை பார்த்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்த நந்து என்ற வாலிபருக்கும் சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில் சிறுமி திடீரென காணாமல் போனதால் சிறுமியின் தாய் தனது மகளை காணவில்லை என ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் நந்து ஓசூர் நவதியில் இருக்கும் உறவினர் வீட்டில் சிறுமியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் சிறுமியை மீட்டனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் நந்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.