சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் விசாரணை ஜெயிலில் ஜெயசீலன் என்பவர் காவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயசீலனின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் தன்னை வங்கி அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார். உங்கள் வங்கி கணக்கு காலாவதியாகிவிட்டது. அந்த கணக்கை புதுப்பிக்க வங்கி விபரங்களை குறுந்தகவல் மூலம் அனுப்பி வையுங்கள் என கூறியுள்ளார்.

இதனை நம்பி ஜெயசீலன் வங்கி கணக்கு எண்ணை குறுந்தகவல் மூலம் அனுப்பியுள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 13 ஆயிரத்து 700 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயசீலன் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வங்கி அதிகாரி போல பேசி பண மோசடியில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.