கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வரதய்யங்கார்பாளையத்தில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ்குமார் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் பார்த்திபன், சதீஷ்குமார் ஆகிய இருவரும் குரும்பபாளையம் பகுதியில் இருக்கும் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது யாரோ ஒருவர் 7000 ரூபாய் பணத்தை எடுக்காமல் எந்திரத்திலேயே விட்டு சென்றது தெரியவந்தது.

இதனால் பார்த்திபனும், சதீஷ்குமார் அந்த பணத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் அந்த பணத்தை உரிய நபரிடம் அல்லது வங்கியில் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நேர்மையாக பணத்தை ஒப்படைத்த 2 பேரையும் போலீசார் பாராட்டியுள்ளனர்.