கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் ரோடு சேரன் நகரில் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி ஜோஸ்வா என்பவர் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். மேலும் ஆன்லைன் மூலம் பலருக்கு வேலை வாங்கி தருவதாகவும் ஜோஸ்வா விளம்பரம் செய்துள்ளார். இதனை நம்பி அரியலூரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் 17 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.

இதேபோல் ஜோஸ்வா 20 பேரிடமிருந்து சுமார் 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஜோஸ்வாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே ஜோஸ்வா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.