
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி சித்தா தோட்டம் கிருஷ்ணராஜ் காலனியில் ஆசை தம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அஸ்வித், அஸ்வந்த் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பள்ளி விடுமுறை தினத்தை முன்னிட்டு நந்தினி தனது மகன்களுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். நேற்று நந்தினி தனது கணவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றார்.
ஆனால் அவர் அழைப்பை ஏற்காததால் சந்தேகமடைந்த நந்தினி பக்கத்து வீட்டுக்காரருக்கு தகவல் தெரிவித்தார். அவர் வீட்டிற்கு சென்று ஜன்னல் வெளியே எட்டி பார்த்தபோது ஆசை தம்பி மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது ஆசை தம்பி இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர் எப்படி இறந்தார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.