கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சேத்துமடை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சேத்துமடை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவர் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான கருப்புசாமி(44) என்பது தெரியவந்தது. மேலும் கருப்பசாமி அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கருப்புசாமியை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.