சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி காமராஜர் நகர் முத்துக்குமரன் தெருவில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் காற்று வாங்குவதற்காக புவனேஸ்வரி வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அப்போது தென்னைமரத்தில் காய்ந்த ஓலை மொட்டை மாடியில் நடுப்பகுதி வரை தொங்கியபடி இருந்தது.

இதனால் புவனேஸ்வரி மாடியில் நின்றபடி தென்னைமர ஓலையை பிடித்து இழுத்த போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை ஆவடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு புவனேஸ்வரியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.