சென்னை மாவட்டத்தில் உள்ள ஏழு கிணறு தியாகராய பிள்ளை தெருவில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருப்பதி என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் நிர்மலா திருப்பதியிடமிருந்து கடந்த 23-ஆம் ஆண்டு 2,400 சதுர அடியுடைய இரண்டு வீட்டு மனைகளை வாங்கியுள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு நிர்மலா செம்பியம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று நிலத்தின் ஆவணங்களை வாங்கி பார்த்த போது கோவூர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஆள் மாறாட்டம் செய்து போலியான ஆவணம் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் 1 கோடியே 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.