கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை அவரது தாய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்து பார்த்ததில் சிறுமியை யாரோ பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக விசாரித்தபோது குழாயில் தண்ணீர் பிடிக்க செல்லும்போது சிறுமிக்கும் கூலி தொழிலாளியான சுசீந்திரன்(24) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சுசீந்திரன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தாய் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சுசீந்திரனை கைது செய்தனர்.