கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சந்திராபுரத்தில் போலீஸ்காரரான அருள்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை ஐ.ஜி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இளமுகில்(3) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அருள்குமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சந்திரபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த அருண்குமார், அவரது மனைவி, குழந்தை ஆகிய மூன்று பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய கார் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.