
சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிப்பாளையம் காளி கவுண்டர் காடு பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீனா என்ற மகன் இருந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு மேளம் அடிக்கும் வேலைக்கு சென்று வந்துள்ளார். நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீனா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீனாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த வழக்குபதிவு செய்த போலீசார் தீனா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.