
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெரும் பத்தை பகுதியில் மத போதகரமான பால் இளங்கோ(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதூரில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்தில் ஆராதனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பால் இளங்கோ மோட்டார் சைக்கிளில் அதிகாலை நேரத்தில் களக்காடு ரோடு வழியாக புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இவர் தனியார் கல்லூரி அருகே சென்ற போது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இளங்கோவை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் இளங்கோ ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.