நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி என்ற மகள்(29) இருந்துள்ளார். நேற்று முன்தினம் லாரி மூலம் அந்த பகுதியில் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. அப்போது லாரியின் பின்புறம் நின்று கொண்டு இந்திராணி தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார்.

இதனை அறியாமல் டிரைவர் லாரியை பின்னோக்கி இயக்கியதால் நிலைதடுமாறி கீழே விழுந்த இந்திராணி லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இந்திராணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.