
தென்காசி மாவட்டத்தில் உள்ள மோட்டை கிராமத்தில் நல்லையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆகாஷ்(19) சென்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஆகாஷ் மோட்டார் சைக்கிளில் தனது நண்பரான ஜெகனுடன்(19) செங்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கோவில் கொடை விழா நிகழ்ச்சியை பார்த்துவிட்டு அதிகாலை 1.30 மணிக்கு தேன்பொத்தை இறக்கத்தில் கலங்காதகண்டி செல்லும் பாதையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் அருகே இருந்த முத்து மாரியம்மன் கோவில் உண்டியல் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.