
சென்னை மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் முனுசாமி சாலையில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் கற்களால் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து பல லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர் கொள்ளையடிக்க முயன்றார். இந்நிலையில் ஏ.டி.எம் எந்திரம் உடைக்கப்பட்ட உடன் ஹைதராபாத்தில் இருக்கும் அந்த வங்கி தலைமை அலுவலகத்தில் அலாரம் ஒலித்ததால் குறிப்பிட்ட வங்கியின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து உதவி கமிஷனர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதனையடுத்து போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பி ஓடிய அசோக்(27) என்பவரை கைது செய்தனர். இவர் உணவு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். செலவுக்கு பணம் இல்லாததால் குடிபோதையில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து திருட முடிந்தது தெரியவந்தது.