
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரம்பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது செல்போனை சார்ஜ் செய்வதற்காக ஸ்விட்ச் போர்டில் ஒயரை இணைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு தங்கராஜ் படுகாயம் அடைந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.