சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டையில் தியா சுபபிரியா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ரிதமீனா வெளிநாட்டில் மருத்துவ படிக்க விரும்பினார். இந்நிலையில் பிரவீன், சதீஷ் ஜனார்த்தனன் ஆகியோர் வெளிநாட்டில் மருத்துவம் படிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக ரிதமீனாவிடம் கூறியுள்ளனர். அவர்கள் மூலமாக கோகுல் சந்தானராஜ் ஆகியோர் அறிமுகமாகினர்.

அவர்கள் வெளிநாட்டில் இருக்கும் பல்கலைக்கழகத்தின் பெயரை கூறி அங்கு மருத்துவம் படிக்க சீட் வாங்கி தருவதாக தெரிவித்து 21 லட்ச ரூபாயை வாங்கிக் கொண்டனர். இதனையடுத்து கடந்த ஆண்டு மருத்துவ சீட்டை உறுதிப்படுத்தி விட்டு கொரோனாவே காரணம் காட்டி முதலாம் ஆண்டு படிப்பை ரிதமீனாவை இங்கிருந்து படிக்க வைத்தனர்.

இதனையடுத்து இரண்டாம் ஆண்டு படிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்ற பார்த்த போது அந்த பெயரில் ஒரு பல்கலைக்கழகமே இல்லை என்பது தெரியவந்தது. ஒரு சிறிய அளவில் கட்டிடம் ஒன்றில் கல்லூரி செயல்படுவது போன்று போலியாக ஏற்பாடு செய்திருப்பதை அறிந்து ரீதமீனாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து மாணவி தரப்பில் அந்த நாட்டில் புகார் அளிக்கப்பட்டது. இதே போல தமிழ்நாட்டில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இது குறித்து ரதிமீனாவின் தாய் தியா சுகப்பிரியா தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.