கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவகுளம் பகுதியில் தம்பி கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜூலியட் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த ஆண்டு ஜூலியட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் அன்று கண்ணன் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.