கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் மருதாச்சலம் தெருவில் சிவில் இன்ஜினியரான பிரேம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் பிரணவ்(19) தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 26-ஆம் தேதி பிரேம்குமார் தனது மனைவியுடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டார். அப்போது பெற்றோருடன் செல்ல மறுப்பு தெரிவித்து பிரணவ் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.

இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த பெற்றோர் பிரணவ் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் பிரணவ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பிரணவ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.