சென்னை மாவட்டத்தில் உள்ள வானகரம் போரூர் கார்டன் பேஸ் ராமசாமி நகரில் காசிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாங்காட்டில் இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் டீனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சைலா(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் காசிநாதன் பணிபுரியும் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வந்துள்ளார். நேற்று காலை உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த சைலா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சைலாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சைலா மன உளைச்சலில் இருந்ததாகவும், இதற்கிடையே பெற்றோர்கள் மருத்துவ படிப்பில் சேர்த்து விட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.