விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் மகாத்மா காந்தி தெருவில் அப்துல் ரஹீம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று 8 பவுன் தங்க நகைகளை அடகு வைத்து 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். பின்னர் அந்த பணத்தை ஸ்கூட்டர் பெட்டிக்குள் வைத்துவிட்டு வங்கி அதிகாரியிடம் அடகு தொடர்பாக சந்தேகங்களை கேட்பதற்காக மீண்டும் வங்கிக்குள் சென்றார். அப்போது மர்ம நபர்கள் ஸ்கூட்டர் பெட்டியின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்றனர்.

இதனையடுத்து வங்கியை விட்டு வெளியே வந்த அப்துல் ரஹீம் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் அப்துல் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது 20 வயது மதிக்கத்தக்க 3 மர்ம நபர்கள் ஸ்கூட்டர் பெட்டியின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.