
சென்னை மாவட்டத்தில் உள்ள இரும்புலியூர் சர்ச் ரோடு ஜெருசலம் நகரில் குமணன்(47) என்பவர் வசித்து வருகிறார். இவர் தாம்பரம் மாநகராட்சி 53-ஆவது வார்டு அ.தி.மு.க வட்டச் செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் குமணன் ரியல் எஸ்டேட் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் இளம் பெண்ணுக்கு பண உதவி செய்ததாக தெரிகிறது.
அதனை பயன்படுத்தி இளம் பெண்ணை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியும், குறுஞ்செய்தி அனுப்பியும் அடிக்கடி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குமணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.