இந்திய நகரங்களில் நிலவும் பரபரப்பான சத்தங்களான கார் ஹார்ன்கள், வியாபாரிகளின் கூச்சல்கள், பைக்குகளின் சத்தம் போன்றவை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விட்டன. இதைச் சுவாரஸ்யமான விதத்தில் பதிவு செய்து, ஆஸ்திரேலிய கண்டென்ட் கிரியேட்டர் ஆண்டி எவன்ஸ் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

அதில் அவர் “வெள்ளை நொய்ஸ் (White Noise) எனக்கு தூங்க உதவவில்லை என்றால், நான் பிரவுன் நொய்ஸ் (Brown Noise) வைத்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அதாவது அவர் இந்தியாவில் ஒரு காலம் வாழ்ந்த பின்னர் தூங்குவதற்கு ‘பிரவுன் நொய்ஸ்’ எனப்படும் ஒலி அமைப்பை பயன்படுத்தத் தொடங்கியதாக கூறியுள்ளார்.

 

அதாவது அவர் லேப்டாபில் இந்தியாவில் இருப்பது போல கார் ஹார்ன்கள், வியாபாரிகளின் கூச்சல்கள், பைக்குகளின் சத்தம் போன்றவற்றை ரெகார்ட் செய்து, தூங்கும் முன் அந்த சத்தங்களை கேட்கும் காட்சி நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்களின் ஆதரவும், நகைச்சுவையான கருத்துக்களும் குவிந்துள்ளன. நடிகர் அலி ஃபஸல் சிரிப்பு எமோஜிகளை பகிர்ந்தார். மற்றொரு நெட்டிசன், “மும்பை சாலையில்தான் தூங்கினீர்களா?” என கேட்டுள்ளார்.