பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பரினீதி சோப்ரா. இவர் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை ஆவார். இந்நிலையில் நடிகை பரினீதி சோப்ராவும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி ராகவ் சத்தாகவும் காதலிப்பதாக சமீப காலமாகவே தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இருவரும் அடிக்கடி விமான நிலையத்திற்கு சேர்ந்து செல்லும் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் நடிகை பரினீதி மற்றும் எம்பி ராகுல் சத்தாவுக்கு வருகின்ற 13-ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் டெல்லியில் வைத்து நடைபெற இருப்பதாகவும் அதுவரை பரினீதி டெல்லியில் தங்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்து டெல்லி விமான நிலையத்தில் இருவரிடமும் நிருபர்கள் கேட்டபோது அவர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர். மேலும் தற்போது வருகின்ற 13-ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவர்கள் இருவரும் இந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.