பிரபல கர்நாடக பாடகி சுதா ரகுநாதன். இவருடைய தாயார் சூடாமணி ஒரு கர்நாடக இசை கலைஞர் ஆவார். இவர் ஆரம்ப காலத்தில் தன் மகளுக்கு ஒரு குருவாக இருந்து கர்நாடக இசையை கற்றுக் கொடுத்துள்ளார். பாடகி சுதா ரகுநாதன் சங்கீத சரஸ்வதி, சங்கீத கலாநிதி, பத்ம விபூஷன், பத்மஸ்ரீ, கலைமாமணி போன்ற பல விருதுகளை வென்றுள்ளார்.

இவர் இவன் என்ற படத்தில் இளையராஜா இசையின் மூலம் பின்னணி பாடகியாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இந்நிலையில் சுதா ரகுநாதனின் தாயார் சூடாமணி இன்று வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்துள்ளார். இந்த தகவலை சுதா ரகுநாதன் தன்னுடைய வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் சுதா ரகுநாதனின் தாயார் சூடாமணியின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.