பாகிஸ்தான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. இதனால் அந்நாட்டில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இதனை சரி செய்வதற்கு அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதில் அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு, வெளிநாடு தூதர்களின் எண்ணிக்கை குறைப்பு, உலக அமைப்புகளுக்கான நிதி குறைப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் அரசு நிர்வாகம் கடுமையான நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்நாட்டில் உள்ள ராணுவ வீரர்களும் உணவு வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்த நாட்டு ஊடகங்களில் வெளியான தகவலின் படி ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதி குறைக்கப்பட்டதால் வீரர்களுக்கு ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே உணவு வழங்கப்படுகின்றது என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து ஃபீல்டு கமாண்டர்கள் மாஸ்டர் ஜெனரல் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் உணவுப் பொருள் விநியோகம் மற்றும் சரக்கு போக்குவரத்தினால் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து ராணுவ இயக்குனர் ஜெனரல் மற்றும் தலைமை அதிகாரி ஆகியோருடன் ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை செய்து வருகின்றனர்.