போஸ்ட் ஆபிஸின் மாத வருமான திட்டத்தில் நல்ல வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்வதன் வாயிலாக மாதந்தோறும் மொத்தத் தொகையை வட்டியாக பெறலாம். ஜனவரி-மார்ச் 2023-க்கான வட்டி விகிதம் 7.1 சதவீதம் ஆக உயர்ந்து உள்ளது. இவ்வட்டி விகிதங்களும் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். இந்த திட்டத்தில் லாக்-இன் காலம் 5 வருடங்கள் ஆகும்.

அண்மையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில், இத்திட்டத்தில் முதலீட்டு வரம்பை ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ.9 லட்சமாக உயர்த்தப்படும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தில் முதலீட்டு வரம்பு அதிகரித்துள்ளது. அதன்பின் ரூபாய்.15 லட்சத்தை கூட்டுக்கணக்கில் முதலீடு செய்யலாம். மொத்தம் 15 லட்சத்தினை முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.9 ஆயிரம் வட்டியாக கிடைக்கும்.

எனினும் இதன் கீழ் கூட்டுக்கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முதலீட்டுக்கு ஏற்ப பணம் வழங்கப்படும். இந்த வட்டி மாத இறுதியில் செலுத்தப்படும் மற்றும் மெச்சூரிட்டி காலம் வரை இத்தொகையைப் பெறுவீர்கள். மற்றொருபுறம் ஒரே கணக்கில் ரூபாய்.9 லட்சத்தை முதலீடு செய்தால், மாத வட்டி ரூபாய்.5,325 ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.