
பிரபல பாடலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா தம்பதி அப்பா அம்மா ஆகப் போவதாக மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். தங்களின் நீண்ட நாள் ஏக்கம் இன்று நிறைவேறியதாக கன்னிகா கண்ணீரோடு தெரிவித்துள்ளார்.

தன்னுடைய கணவருக்கு முதன்முறையாக கர்ப்பமாக இருப்பதை சொல்லும் போது சினேகன் எமோஷனல் ஆகி, மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோவை கன்னிகா பகிர்ந்துள்ளார். “நாங்கள் அப்பா, அம்மா ஆகப் போகிறோம். உங்கள் அனைவரின் அன்பும் ஆசிர்வாதமும் எங்களுக்கு வேண்டும்” என்று தம்பதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த மகிழ்ச்சியான செய்திக்கு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.