
மத்திய பிரதேசம் மாநிலத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்க மறுக்கப்பட்டதை தொடர்ந்து வீதியில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேச மாநிலம் களிகா மாதா மந்திர் சாலை பகுதியில் கிருஷ்ணா க்வாலா-நீது தம்பதியினர் வசித்து வருகின்றனர். கிருஷ்ணாவின் மனைவி நீது கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில் கடந்த மார்ச் 23ஆம் தேதி காலை 9 மணியளவில் நீதுவுக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டதால் கிருஷ்ணா அவரை உள்ளூர் சுகாதார மையத்திற்கு அழைத்து சென்றார். அங்கு செத்னா சரேல் என்ற செவிலியர் பணியில் இருந்தார். அவர் நீதுவை பரிசோதித்து விட்டு இன்னும் சில நாட்கள் கழித்து தான் குழந்தை பிறக்கும் என்று கூறி அனுமதிக்க மறுத்தார். இதனால் கிருஷ்ணா தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்தார்.
அதன் பின் நடு இரவில் நீதுவுக்கு கடும் பிரசவ வலி ஏற்பட்டதால் கிருஷ்ணா தனது மனைவியை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அங்கு பணியாற்றி கொண்டிருந்த காயத்ரி படீதோர் என்ற செவிலியர் பரிசோதித்து பார்த்துவிட்டு இன்னும் 15 மணி நேரத்திற்கு பிறகு தான் குழந்தை பிறக்கும் என்று கூறி அனுமதிக்க மறுத்துவிட்டார். இதனால் அவர் தனது மனைவியுடன் வீட்டிற்கு திரும்பினார்.
मध्य प्रदेश के रतलाम जिले में एक महिला ने अपने नवजात शिशु को खो दिया, जब उसे शनिवार को स्थानीय स्वास्थ्य केंद्र में कथित तौर पर दो बार इलाज से वंचित कर दिया गया। यह स्वास्थ्य केंद्र रतलाम के सैलाना कस्बे में स्थित था। बाद में महिला को मजबूरन हाथ ठेले पर अस्पताल ले जाना पड़ा,… pic.twitter.com/8sX9Ds0D1P
— Ashish rai (@journorai) March 29, 2025
அப்போது அவர்கள் நடந்து சென்று கொண்டிருக்கும்போது நீதுவின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் அருகில் இருந்த தள்ளு வண்டியில் தனது மனைவியை வைத்து மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்தார். ஆனால் வழியில் செல்லும்போது நீதுவுக்கு குழந்தை பிறந்து விட்டது. இதைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கிருஷ்ணா தனது மனைவியையும், குழந்தையையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக கூறினார்கள். இதனால் கிருஷ்ணாவும் அவரது மனைவியும் மிகவும் வருத்தத்துக்கு ஆளாகினார்கள். மேலும் இந்த சம்பவத்தில் அலட்சியமாக மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.