
தாய்லாந்தின் மே என அழைக்கப்படும் 30 வயதுடைய பெண், வேலைக்கான அழுத்தத்தால் மரணமடைந்த சம்பவம் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவர் பெருங்குடல் அழற்சி காரணமாக கொஞ்ச நாள் சிகிச்சை பெற்று விடுப்பில் இருந்தார் டிஸ்சார்ஜ் ஆன பிறகு வேலைக்கு சென்றுள்ளார் ஆனால் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் மீண்டும் ஒரு சிக்லீவ் மேனேஜரிடம் கேட்டார் ஆனால் மேனேஜர் புதிய மருத்துவச் சான்றிதழை சமர்ப்பிர்க்குமாறு கூறினார்.
இவளது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தாலும், பணி இழந்துவிடுவோமோ என்ற பயத்தால் பணிக்கு வந்தார். பணியில் இருக்கும்போது, அவர் திடீரென சரிந்து விழுந்து மயக்கம் ஆனார். உடனே மமருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் அவர் உயிரிழந்தார். அவரது மரணம், வேலைக்கான அழுத்தத்தால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து தீவிரமாக விவாதிக்க வைக்கிறது.
இதற்கு முன்னதாக வேலை அழுத்தத்தின் காரணமாக இருவர் உயிரிழந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில் தற்போது மீண்டும் அதே போன்ற செய்தி வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.