
திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், CAG அறிக்கையில் 9 ஆண்டுகளில் பாஜக அரசின் உடைய அத்தனை ஊழல்களும் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. ஏழரை லட்சம் கோடி ரூபாய்க்கு கணக்கு இல்லை. இது எல்லாம் தொடர்ந்து நம்முடைய தலைவர் அவர்கள் என்ன ஆட்சின்னு என்று கேள்வி கேட்டா… அதற்கு பதில் கிடையாது.
ஆனால் ஒன்றிய பிரதமர் திரு மோடி அவர்கள் எப்ப பார்த்தாலும் நம்முடைய தலைவர் நினைப்புதான், திமுக நினைப்புதான்… என் நினைப்புதான்… மத்திய பிரதேசத்தில் பிரச்சாரக் கூட்டம். மத்திய பிரதேசம் போய் என்னை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். உதயநிதி இப்படி பேசிட்டார் என்று…… எங்கு போனாலும் என் நினைப்பிலே சுற்றிக் கொண்டிருக்கிறார்…
நான் பேசாத ஒன்றை பேசினேன் என்று சொல்லி, பொய்யாகி இப்போது வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது….. நீதிமன்றத்தின் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கண்டிப்பாக நாம் அங்கு ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.நான் ஏதும் தவறாக பேசவில்லை.
சமூக நீதி பற்றி தான் பேசினேன்… அனைவரும் சமம் என்று தான் பேசினேன்…..என்னை நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்… நான் அங்கு வந்து மன்னிப்பு கேட்க மாட்டேன்… நான் பேசியது பேசியதுதான்…. நான் எதுவும் தப்பாக பேசவில்லை… நான் என்னுடைய கொள்கையை தான் பேசினேன்…. கட்சியினுடைய கொள்கை தான் பேசினேன்…. நான் கலைஞருடைய பேரன், மன்னிப்பு எல்லாம் கேட்க மாட்டேன் என சூளுரைத்தார்.