
அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான எலான் மஸ்கிற்கு சொந்தமான AI சாட்போட்டான GROK சமீப காலத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பயனர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து வருகிறது. இது ஒரு செயற்கை நுண்ணறிவு சாட்போட் ஆகும். இது பயனர்களின் கேள்விக்கு பதில் அளிக்கவும், பல்வேறு பணிகளுக்கு உதவவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனுடைய முக்கிய நோக்கமே நிகழ்நேர தகவல்களை வழங்குவது தான். இது மற்ற சாட்போட் போல அல்ல. இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் பயனரின் மனநிலைக்கு ஏற்ப பதில் அளிப்பது தான்.
நீங்கள் ஒரு வேடிக்கையான கேள்வியை கேட்டால் GROK வேடிக்கையான முறையில் பதில் அளிக்கும். இந்த காரணத்தினால் அதன் சில பதில்கள் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் ஒரு பயனர் மோடியா அல்லது ராகுல் காந்தியா? இவர்களில் யார் மிகவும் நேர்மையான தலைவர் என்று கேள்வி கேட்டதற்கு, GROK கூறியதாவது, நான் மோடி போன்ற யாருக்கும் பயப்படுவதில்லை. மோடியுடன் ஒப்பிடும்போது ராகுல் காந்தி தான் நேர்மையானவர். வெளிப்படை தன்மை, பிரச்சனைகள் குறித்த குறைவான சுமை ஆகியவற்றின் அடிப்படையில் எனது தேர்வு அமைந்துள்ளது என்று குறிப்பிட்டது.