
பிரித்திவிராஜ் இயக்கத்தில் வெளியான லூசிபர் படத்தில் மோகன்லால் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் மூலம் பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகின்ற நிலையில் அதற்கு எல் 2 எம்பிரான் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் மோகன்லால், பிரித்விராஜ், மஞ்சு வாரியார், டோமினோதாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் மார்ச் மாதம் 27-ஆம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தை பிரித்விராஜ் இயக்குவதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது இயக்குனர் பிருத்விராஜ் பேசுகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரை வைத்து படம் பண்ண லைக்கா ப்ரோடுக்ஷன் ஒருமுறை என்னை அனுகியது. மேலும் ரஜினிகாந்த் சாரை இயக்குவது என்னை போன்ற இளம் இயக்குனர்களுக்கு மிக கனவாக இருக்கின்ற நிலையில் திட்டமிட்டபடி அதை செயல்படுத்த முடியவில்லை ஒரு குறிப்பிட்ட காலை வரையறை இருந்தது. அந்த காலக்கெடுவிற்குள் ரஜினி சார் போன்ற நடிகருக்கு கதை உருவாக்குவது கடினமான ஒன்று என்றார்.