துபாய் மற்றும் சார்ஜாவில் ஒன்பதாவது ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அக்டோபர் 3- ஆம் தேதி முதல் 20- ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ளும். குரூப் A அணியில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை உள்ளது. குரூப்- B அணியில் தெனாப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளது.

அக்டோபர் நான்காம் தேதி இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் அக்டோபர் மாதம் ஆறாம் தேதி நடக்கிறது. இந்த நிலையில் ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடர்பான பரிசு தொகையை அறிவித்தது. இந்திய மதிப்பில் 66.64 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட உள்ளது. கோப்பையை தட்டி செல்லும் அணிக்கு 19.60 கோடி ரூபாய் பரிசு கிடைக்கும், ரன்னர் அப் 9.80 கோடி ரூபாயும், அரை இறுதிக்கு தகுதி பெறும் அணிக்கு 5.65 கோடி பரிசாக வழங்கப்படும்.